Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 8, 2023

கணையத்தைப் பாதுகாக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

நமது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவது இன்சுலின் திரவம். இது உடலின் கணையம் என்கிற பகுதியில் சுரக்கிறது.

கணையம், முக்கியமான நொதிகள், ஹார்மோன்களைத் தயாரிக்கிறது. ரத்தவோட்டத்தில் முக்கியமான திரவங்களைச் சேர்க்கிறது. கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சில உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். அவை என்னென்ன, அவற்றில் உள்ள சத்துகள் என்னென்ன எனப் பார்ப்போமா?பூண்டில் உள்ள அல்லிசின், கணையத்தின் ஆரோக்கியம் மேம்படவும் புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கவும் உதவுகிறது.

இதிலுள்ள சல்பர், அர்ஜினைன், ஒலிகோசகரைடுகள், ஃபிளாவனாய்டுகளின், செலினியம் போன்றவை கணையத்தின் திசுக்களில் நேர்மறை தாக்கங்களை உண்டாகச் செய்கின்றன. சிவப்பு திராட்சையில் ரெஸ்வெரடால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது ரத்தநாளங்கள் சேதம் அடையாமல் காக்க உதவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின், கணையப் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கிறது.

இது ககணையத்தை பாதுகாத்து, உடலுக்குள் சர்க்கரை அளவு சீராக செலுத்துகிறது. புரோக்கோலியில் சல்பர் காம்பவுண்டுகள் உள்ளன. இவை கணையப்புற்று ஏற்படாமல் தடுக்கும். மேலும், புரோக்கோலி கணையத்தின் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது.டோஃபூ பன்னீரில் குறைந்த கொழுப்புள்ள புரதம் உள்ளது.

இது கணையத்தின் புத்துயிர் பெற உதவுகிறது. ஆனால் இதில் கொழுப்பு அதிகம் என்பதால் குறைந்த அளவே சாப்பிடுவது நல்லது. காளான், கீரை, தயிர், ப்ளூபெர்ரி, செர்ரி, தக்காளி போன்ற உணவுகளும் கணையத்துக்கு நன்மை உண்டாக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News