Join THAMIZHKADAL WhatsApp Groups
நம்மில் சிலருக்கு ஏற்படும் இரத்தக்கட்டு, சுளுக்கு, தசைப் பிரட்டல், நரம்பு சுருட்டல், அடிபட்ட இடத்தில் வீக்கம் போன்றவற்றை குணமாக்க எளிமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் வீட்டில் இருக்கும் கற்றாழையை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்த மஞ்சள் திரவத்தை நீக்கிய பிறகு தான் நாம் கற்றாழையை மருந்தாக பயன்படுத்துவோம்.
ஆனால் இந்த மஞ்சள் திரவத்தை வெயிலில் நன்றாக காய வைத்து பிறகு அதை பயன்படுத்துவதால் மஞ்சள் திரவத்தில் இருக்கும் சில மருத்துவ குணங்கள் நம் உடலுக்கு நன்மை தருகின்றது.
இந்த மஞ்சள் நிற திரவத்தை நன்கு காய வைத்த பிறகு இது கருப்பாக மாறிவிடும். எனவே இதை கரியபோளம், மூசாம்பரம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த கரியபோளத்திலும் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளது. பொதுவாக இந்த மஞ்சள் நிறத் திரவத்தை நன்கு முதிர்ச்சியடைந்த கற்றாழையில் இருந்து எடுத்துதான் இந்த கரியபோளம் தயாரிக்கப்படுகிறது.
இந்த கரியபோளம் நாட்டு மருந்து கடைகளில் இரண்டு வகைகளாக கிடைக்கின்றது. உள்.மருந்தாகவும், வெளி மருந்தாகவும் என்று இரண்டு வகைகளில் கிடைக்கின்றது.
அதாவது சாப்பிடவும், வெளியில் ஏற்படும் காயங்களுக்கு மருந்து போடவும் என்று இரண்டு வகைகளில் கிடைக்கின்றது.
இந்த கரியபோளம் மருந்தை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்களே எடுத்துக் கொள்ளக் கூடாது.
கரிய போளம் மருந்தின் பயன்கள்
அடிபட்டு வீக்கம் ஏற்பட்டால் அந்த வீக்கத்தை குறைக்க இந்த கரியபோளம் பயன்படுகின்றது.
நரம்பு சுருட்டல், சுளுக்கு, தசைப் பிரட்டல் போன்று ஏதாவது இருந்தால் அதற்கும் இந்த கரியபோளம் மருந்தூ பயன்படுத்தலாம்.
இரத்தக் கட்டு நமக்கு இருந்தால் அதை படிப்படியாக சரி செய்யும்.தோல் வெடிப்பு, வெட்டு, தீக்காயம் போன்ற எல்லாவற்றிற்கும் பயன்படுகின்றது.
கரியபோளம் பயன்படுத்தும் முறை
அடுப்பை பற்ற வைத்து அடுப்பில் சிறிய பாத்திரம் வைத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து இந்த கரியபோளத்தை தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைவான தீயில் மட்டுமே கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் சூடாகும் பொழுது இந்த கரியபோளம் மருந்தை கிளறி விடவேண்டும். கரியபோளம் நன்றாக கரைந்து தண்ணீர் கெட்டியாக மாறி இருக்கும். அடுத்து இதை இறக்கி வைத்து ஆறும் வரை காத்திருக்க வேண்டும்.
இதில் அரைமூடி எலுமிச்சை சாறு இதில் சேர்க்க வேண்டும். பிறகு இதமான சூட்டிற்கு வந்த பிறகு இந்த எண்ணெய்யை சிறிதளவு எடுத்து காயம், வீக்கம் உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும்.
கால் வீக்கத்திற்கு இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள இந்த எண்ணெய்யை சிறிதளவு எடுத்துக் கொண்டு கால்களில் வீக்கம் இருக்கும் பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதை ஒரு நாளுக்கு மூன்று வேலை அதாவது காலை, மதியம், இரவு என மூன்று வேலைகள் தேய்க்க வேண்டும்.
இரவு நேரத்தில் தடவினால் காலை வரை அப்படியே விட்டு காலையில் தண்ணீரால் கழுவ வேண்டும். இந்த மருந்தை தேய்த்த பிறகு எதிலும் படாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எல்லா பக்கமும் கரையாகி விடும்.
இந்த மருந்தை எவ்வளவு நாள் தடவ வேண்டும் என்பது அவர்களுக்கு இருக்கும் வீக்கத்தை பொறுத்து அமையும். ஒரு சிலருக்கு அடிபட்டு கல்லு மாதிரி வீக்கம் இருக்கும். அவர்கள் தொடர்ந்து இதை வீக்கம் உள்ள இடத்தில் தேய்த்தால் வீக்கம் குறையத் தெடங்கும்.
இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது. இரத்தக்கட்டு, சுளுக்கு, நரம்பு சுருட்டல், தசை பிரட்டல், வலி, வீக்கம் போன்றவை இருந்தால் ஒரு முறையாவது இந்த கரியபோளத்தை இவ்வாறு மருந்து தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்.
No comments:
Post a Comment