Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய மக்களின் கைவிரல் ரேகை மற்றும் கண் விழித்திரையுடன்கூடிய அனைவருக்குமான பொதுவான அடையாளமாக ஆதார் அட்டை மாறியுள்ளது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் வங்கி, அரசு சேவைகள் போன்றவை உறுதிப்படுத்தப் படுகின்றன. ஆனால், சிலர் ஒன்றுக்கும் அதிகமான மொபைல் எண்ணை பயன்படுத்துவதால் இதில் குழப்பம் ஏற்படுகிறது.
மக்களின் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ - uidai) ஒரு புதிய நடைமுறையை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த வசதியின் மூலம் ஆதாரில் ஏற்கெனவே எந்த மொபைல் எண் அளித்துள்ளோம் என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. யுஐடிஏஐ-வின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar செயலியில் `மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்' என்ற அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பயனர்கள் பெறலாம்.
குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அதில் அறிந்துகொள்ளலாம். ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை அல்லது தற்போது பயன்பாட்டில் இல்லை என்றால் mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில் பயனர்கள் ஏற்கெனவே கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி இலக்கங்களைப் பார்க்க முடியும்.
மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் அல்லது புதிதாக இணைக்க விரும்பினால் மக்கள் தங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்துக்குச் சென்று புதுபித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment