Join THAMIZHKADAL WhatsApp Groups
கோவையில் நீட் நுழைவுத்தேர்வுக்கு, 7,128 பேர் விண்ணப்பித்ததில், 6,932 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு சற்று எளிதாகவே இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். கோவையில், 13 மையங்களில் 6,932 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர்; 196 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் உரிய வசதிகள் செய்யப்பட்டு இருந்ததால், எவ்வித சிக்கல்களும் இன்றி தேர்வு நடத்தப்பட்டன.உரிய அறிவுறுத்தல்கள் முன்பே கொடுக்கப்பட்ட நிலையில், 11:30 மணி முதலே மையங்களுக்கு தேர்வர்கள் வரத்துவங்கினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் தேர்வு சற்று எளிதாகவே இருந்ததாக இரண்டு, மூன்றாம் முறை தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.முதன்முறை எழுதிய மாணவர்களும், தாவரவியல், விலங்கியல் தேர்வு எளிதாக இருந்தாலும், இயற்பியல், வேதியியல் தேர்வுகள் சற்று சவாலாக இருந்ததாக தெரிவித்தனர்.
நடப்பாண்டில் தேர்வு சற்று எளிதாகவே இருந்ததால், கடந்தாண்டை காட்டிலும் கட்-ஆப் உயரும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவி மிருதுபாஷினி கூறுகையில், ''முதன்முறை தேர்வை எதிர்கொண்டுள்ளேன்; எதிர்பார்த்த கேள்விகளே அதிகம் இருந்தன. என்.சி.இ.ஆர்.டி., பாடபுத்தகங்களில் இருந்தே, கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
வேதியியல் பிரிவில், கனிம வேதியியல் சார்ந்த கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தன,'' என்றார். ஏமாற்றியது 'கூகுள்'; ஆனாலும் 'கூல்'n கேந்திரிய வித்யாலயா பள்ளியில், மாணவர் ஒருவர் தேர்வு மையத்திற்கு சற்று தாமதமாக வந்து சேர்ந்தார்.
கூகுள் மேப் பார்த்து வந்ததால், தாமதம் ஆனதாக மாணவர் அனுமதி கோரினார்; தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் சற்று ஆலோசித்து, உரிய பரிசோதனைக்கு பின், தேர்வு எழுத அனுமதித்தனர்.n புலியகுளம் தேர்வு மையத்தில், பர்தா அணிந்து வந்த மாணவிக்கு, மைய அதிகாரிகள் அனுமதியளித்தனர். சக பெற்றோர் ஒருவர், ஆடை கட்டுப்பாடு விதித்துள்ள சூழலில், மத ரீதியான உடைக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். போலீசார் சமரசம் செய்து அமைதிப்படுத்தினர்.
No comments:
Post a Comment