Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்குத் (D.El.Ed ) தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் வெ.உஷாராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (D.El.Ed ) விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் வருகிற மே 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்த விண்ணப்பத்தை சென்னை-5, திருவல்லிக்கேணி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக, ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழ்கள், தேர்வுக் கட்டணத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.
மேலும், ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் 50, மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ15, ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ70 செலுத்துமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பதிவேற்ற மே9ஆம் தேதி முதல் மே13ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை சென்னை-5, திருவல்லிக்கேணி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதோடு, எனவும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியோர் ரூபாய் 1000/- கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு அனுமதித் திட்டத்தில் மே 15 மற்றும் மே16ஆம் தேதிகளில் மட்டும் வின்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment