Join THAMIZHKADAL WhatsApp Groups
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2023 மே 7 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இருப்பினும், தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் இல்லை, எனவே கூடுதல் கால அவகாசம் கோரி தேர்வை ஒத்திவைக்குமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் தேசிய தேர்வு முகமை (NTA) மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க மறுத்துவிட்டது, தேர்வு தேதியை ஒத்திவைப்பது கல்விச் சுழற்சியைப் பாதிக்கும் என்று கூறியுள்ளது.
இந்தநிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நீட் தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் குறைவாக இருப்பதாகக் கூறி, தேர்வை ஒத்திவைக்குமாறு அரசை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, மருத்துவ மாணவர்கள் குழு, நீட் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி இணையதளத்தில் ஆன்லைன் மனுவை உருவாக்கியது. நீட் தேர்வை வெறும் 15 நாட்களுக்கு தள்ளி வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மனுவில் 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மனுவில், நீட் தேர்வை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். அதில், ஜம்மு, பஞ்சாப் மற்றும் NIOS வாரியங்கள் போன்ற பிற தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வு இடையில் வருகிறது போன்ற காரணங்களை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நீட் தேர்வுக்கான நகர தகவல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது மற்றும் விண்ணப்பதாரர்கள் அதை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய தேர்வு முகமை விரைவில் ஹால் டிக்கெட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு மே 7ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும்.
No comments:
Post a Comment