Join THAMIZHKADAL WhatsApp Groups
நாட்டில் உள்ள பாதி வங்கிகள் ஆன்லைன் சேவையை வழங்குகிறது. ஆனால், அனைவரும் இந்த சேவையை பயன்படுத்துவதில்லை. ஆன்லைன் சேவையை பயன்படுத்த தெரியாதவர்கள், எந்த வேலையாக இருந்தாலும் வங்கிக்கு சென்று தான் செய்வார்கள். ஆனால், இனி இவர்களும் வங்கிக்கு செல்லாமல், அவர்களின் வேலையை வீட்டிலிருந்தே முடிப்பதற்கான சில சேவைகளை செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.
இனி SBI வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக அதாவது பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுக்க வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்தச் சேவையை வாடிக்கையாளர்கள் இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.
அதாவது, பாஸ்புக்கை என்ட்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் இப்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அனைத்து தகவல்களையும் புதுப்பிக்கலாம்.
வங்கிகள் இந்த சேவைக்கு ஒரு குறிப்பிட்ட எண்களை வழங்கியுள்ளன. இந்த எண்களை அழைப்பதன் மூலம் இந்த சேவைக்கு உங்கள் எண்ணை பதிவு செய்யலாம்.
உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டவுடன், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் மூலம் உங்கள் மொபைலுக்கு வங்கிக் கணக்கு அறிக்கை அனுப்பப்படும்.
உங்கள் வீட்டில் தொலைபேசியில் கணக்கு அறிக்கையைப் பெற, நீங்கள் SBI வாடிக்கையாளர் சேவையை அழைக்க வேண்டும். இதற்கான கட்டணமில்லா எண்ணை வங்கி வெளியிட்டுள்ளது.
1800 1234 மற்றும் 1800 2100 என்ற கட்டணமில்லா எண்ணை நீங்கள் அழைக்கலாம். அழைத்த பிறகு, கணக்கு இருப்பு மற்றும் பரிவர்த்தனை விவரங்களைப் பெற, 1-ஐக் கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிட வேண்டும். அதன் பிறகு கணக்கு அறிக்கையைப் பெற 2 ஐ அழுத்த வேண்டும்.
பின்னர், அங்கிருந்து வங்கி அறிக்கை காலத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது, நீங்கள் வங்கி அறிக்கையைத் தேடும் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பிறகு வங்கி அறிக்கை உங்கள் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணுக்கு வங்கியால் அனுப்பப்படும்.
No comments:
Post a Comment