Join THAMIZHKADAL WhatsApp Groups
10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36,593 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த முறை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மொழித்தேர்வை எழுதவில்லை.
இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக திருத்தப்பட்டன. திருத்தப்பட்ட வினாத்தாள் மதிப்பெண்களை இதையடுத்து தொகுக்கப்பட்டது. பின்னர் அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்த நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் எப்போதும் சதம் அடிப்பது மிக மிக கடினம். ஆனால் கடந்த சில வருடங்களாக சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. வெறும் 2 பேர் மட்டுமே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்துள்ளனர்.
இந்த தேர்வில் சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு:
1. தமிழ் 2
2. ஆங்கிலம் 12
3. இயற்பியல் - 812
4. வேதியியல் - 3909
5உயிரியல் - 1494
6.கணிதம் - 690
7.தாவரவியல் - 340
8 விலங்கியல் - 154
9. கணினி அறிவியல்- 4618
10. வணிகவியல் - 5678
11. கணக்குப் பதிவியல் - 6573
12 பொருளியல் - 1760
13. கணினிப் பயன்பாடுகள் - 4051
14. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 1334
தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் பிடித்து உள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது. 12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மே-2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 23,957. இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை. 32,501 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3,49,697 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,05,753 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.67% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு முடிவு: இதையடுத்து கடந்த 19ம் தேதி காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாட்டில 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6 தேதி தொடங்கியது. இரண்டு வாரம் நடந்த தேர்வுகள் ஏப்ரல் 20ம் தேதி முடிவு பெற்றது. மொத்தம் இந்த தேர்வை 9, 38, 291 மாணவ, மாணவியர் எழுதினர்.
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை: 9,14,320 மாணவியர்களின் எண்ணிக்கை :4,55,017 மாணவர்களின் எண்ணிக்கை :4,59,303 தேர்ச்சி பெற்றவர்கள்:8,35,614 (91.39%) மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர், கடந்த மே-2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணாக்கர்கள் 9,12,620. தேர்ச்சி பெற்றோர் 8,21,994. தேர்ச்சி சதவிகிதம் 90.07% ஆகும்.
திருத்தம்: இந்த நிலையில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பெயர், பிறந்த தேதி, புகைப்பட திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம் அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருத்தம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் பள்ளி மாணவ மாணவியர் விவரங்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
தேர்ச்சி விழுக்காட்டின் உண்மை நிலை அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
ReplyDelete