11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 1.31 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உடற்கல்வித்துறைக்கென தனி பாடம் கொண்டு வருவது குறித்து 15ல் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
மாநில கல்வி கொள்கை குறித்து குழு அறிக்கை அளித்த பின் முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும். கோடை காலத்தையொட்டி வகுப்பறைகளில் நீர் இருப்பதை உறுதிப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு போட்டி தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை என்றார்.
முன்னதாக பள்ளிகள் திறப்பையொட்டி சென்னை விருகம்பாக்கம் மகளிர் பள்ளியில் மாணவிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றார்.
அப்போது மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் பாடநூல், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.
No comments:
Post a Comment