Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 10, 2023

அஞ்சல் துறையில் 12,828 பணியிடங்கள்! -ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.6.2023

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 12,828 கிராமின் டாக் சேவக் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள் (ஜூன் 11) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 12,828. தமிழ்நாட்டில் 18 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணி: Gramin Dak Sevaks 1. Branch post Master 2. Assistant Branch Post Master) தகுதி: மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட மாநிலங்களில் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: BPM பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000-29,380 வழங்கப்படும்.

ABPM பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10,000 -24,470 வழங்கப்படும். வயதுவரம்பு: 11.6.2023 தேதியின்படி, 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து வயதுவரம்பு சலுகைகளை தெரிந்துகொள்ளவும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தவும். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விகிதங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.6.2023

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News