குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவைகள் கிடைக்க குருபகவான் அருள் தேவை.
மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் வக்ர கதியில் பயணம் செய்வார். குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. குருவின் அருளால் யாருக்கெல்லாம் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும் யார் காட்டில் பண மழை பொழியப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: ராகு உடன் இணைந்திருக்கும் ஜென்ம குரு வக்ரமடையும் காலத்தில் உங்களுக்கு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜென்ம ராகு அவ்வப்போது தனது செயலை காட்டுவார். மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது.
ரிஷபம்: இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு குடும்பத்தில் குதூகலத்தை கொடுக்கும். பணவரவு நன்றாக இருக்கும் கூடவே செலவுகளும் வரும் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கோபத்தை கட்டுப்படுத்தவும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான குரு பெயர்ச்சியாக இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. பழனி முருகனை மலைமீதேறி சென்று தரிசனம் செய்து வருவது நன்மையை தரும்.
மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மன நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். லாப குரு உங்களுக்கு ராஜ யோகத்தை தரப்போகிறது. புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். குரு பகவான் வக்ரமடைவதால் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு பணம் விவகாரங்களில் கவனம் தேவை. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வெற்றி மீது வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கடகம்: பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம். குரு வக்ரமடையும் கால கட்டத்தில் சின்னச் சின்ன சிக்கல்கள் வந்து சேரும். மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
சிம்மம்: குரு பகவான் தனது பொன்னான பார்வையால் கோடி நன்மைகளை தரப்போகிறார். பாக்ய ஸ்தான குருவினால் சகலவிதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கப்போகிறது. படிப்பில் இருந்த தடைகள், வேலையில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம், சுபகாரியம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புரமோசனும் கிடைக்கும். குரு வக்ரமடையும் காலத்தில் வேலையில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
கன்னி: குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். குரு பகவான் வக்ரமடையும் கால கட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். திடீர் வேலை மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். தாய் வழி உறவு தந்தை வழி உறவில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் வரலாம். குரு பகவானை வியாழக்கிழமை வணங்க வேலையில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
துலாம்: களத்திர ஸ்தான குரு நேரடியாக உங்களை பார்க்கிறார். நீங்கள் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபேறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.
விருச்சிகம்: குரு பகவான் உங்களுக்கு நல்ல வேலையை தரப்போகிறார். சிலருக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவீர்கள். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். குரு பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் போது வக்ரமடைவதால் உங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
தனுசு: ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். வீடு மாற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
மகரம்: சுக ஸ்தான குரு பகவான் ராகு உடன் பயணம் செய்யும் போது வக்ரமடைகிறார். நீங்கள் பார்க்கும் வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வெற்றியும் அனுகூலமும் கிடைக்கும் நன்மைகள் தேடி வரும்.
கும்பம்: மூன்றாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றியை தேடித்தருவார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. பணம் விசயங்களில் நிதானமும் கவனமும் தேவைப்படும். உங்களுக்கு வரும் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். திடீர் வேலை மாற்றங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட தேவதையின் அருள் பார்வை படும் காலத்தில் பண மழையில் நனைவீர்கள்.
மீனம்: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, உங்க ராசிநாதன் குரு பகவான் உங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. வேலையில் புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். அஷ்டலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.
No comments:
Post a Comment