Join THAMIZHKADAL WhatsApp Groups
சனி பகவான் ராஜ கிராகம். கால புருஷ தத்துவப்படி தொழில் காரகன், லாப காரகன், ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் தங்கும் சனிபகவான் ஒரு ஆண்டில் 4 மாத காலம் வக்ரமடைவார்.
ஜூன் 17ஆம் தேதி முதல் சனிபகவான் வக்ரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஜூன் 17 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களில் யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: பூர்வ புண்ணிய சனிபகவான் வக்ரமடைகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கு தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் நடைபெறும். கடன் பிரச்சினைகள் நீங்கும். இதுநாள் வரை உங்களை தொந்தரவு செய்து வந்த நோய்கள் நீங்கும்.
விருச்சிகம்: சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார். வக்ரமடையும் சனியால் உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். ஜாக்பாட் அடிக்கும் பண வருமானத்தினால் பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். அனுமனை வணங்க அம்மாவிற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
தனுசு: சனிபகவான் மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். வக்ரகதியில் பயணம் செய்யும் சனிபகவானால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வந்து சேரும். பண வரவு அதிகரித்தாலும் உங்களுக்கு வீண் விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். குரு பகவான் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வேலையில் இட தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் அலைச்சல்களும் அசதியும்தான் அதிகரிக்கும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.
மகரம்: சனி தற்போது உங்களுடைய ராசிக்கு இரண்டாவது வீட்டில் இருக்கிறார். வக்ரகதியில் செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கடனாக கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கைக்கு வராத பணம் வீடு தேடி வருவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஏழரை சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க விநாயகருக்கு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
கும்பம்: சனி உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். வக்ரமடையும் சனிபகவானால் இதுநாள்வரைக்கும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு கைகூடி வரும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும் காலமாகும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
மீனம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வக்ரகதியில் செல்லும் சனிபகவானால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். இளம் தலைமுறையினருக்கு வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ஏழரைசனியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள். காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட நோய் பாதிப்புகள் குறையும்.
No comments:
Post a Comment