Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர்-செயலர் இரா.சுதன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக சென்னை, அரியலூர், மதுரை, தருமபுரி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய 40 மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மாதிரிப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர தகுதிபெற்ற மாணவர்களின் விவரம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாதிரிப் பள்ளிகளில் ஜூன் 21-ம் தேதிக்குள் சேருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment