Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதாவது, தெலங்கானா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேஷ், தமிழ் நாடு, ஒடிசா, நாகலாந்து, மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மத்திய பிரதேஷ் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதியதாக 50 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், 30 அரசு மற்றும் 20 தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும். இதன்மூலம் நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 702 ஆக உயர்கிறது.
இதில், தெலங்கானாவில், இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலங்கானாவிற்கு மட்டும் 12 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி கிட்டியுள்ளது. அதை தொடர்ந்து, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேஷ் மாநிலங்களுக்கு 5 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 3 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பிஎஸ்ஜி அறக்கட்டளை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளை மற்றும் ஈரோடு வாய்க்கால்மேட்டில் நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைகிறது.
இதன் மூலம், நாடு முழுவதும், மருத்துவப்படிப்பிற்கு கூடுதலாக 8,195 இடங்கள் ஒதுக்கப்படும்.
No comments:
Post a Comment