Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 21, 2023

இந்த 5 ராசிக்காரர்கள் காட்டில் இனி பணமழைதான்.. அள்ளிக்கொடுக்கும் புதாதித்ய யோகம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
புதன் நவ கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார்.

அவர் புத்திசாலித்தனத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். ஜூன் 24 ஆம் தேதி மதியம் 12.35 மணிக்கு அவர் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இவர் அடுத்த 14 நாட்களுக்கு, அதாவது ஜூலை 8 வரை மிதுன ராசியிலேயே சஞ்சரிப்பார். ஜூலை 8 ஆம் தேதி மாலை கடக ராசிக்குள் நுழைவார். மிதுன ராசியில் சஞ்சாரம் செய்யும் போது, ​​சூரிய பகவான் ஏற்கனவே அங்கே அமர்ந்திருக்கிறார்.
இந்த இணைவால் புத்தாதித்ய யோகம் என்று அழைக்கப்படும் மிகவும் மங்களகரமான யோகம் உருவாகும். இது அனைத்து ராசி அறிகுறிகளின் வாழ்விலும் பெரும் மாற்றங்களை கொண்டு வரும். அந்தவகையில், புத்தம் பெயர்ச்சியால் சுப பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம். புதாத்திய யோகத்தால் சுப பலன்களை பெறப்போகும் அந்த அதிர்ஷ்டமான 5 ராசிகள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம் : புதாத்திய யோகத்தால் உங்களுக்கு பல்வேறு பலன் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் அளவுக்களத்தி நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை தீரும். சக ஊழியர்கள் மற்றும் மூத்த ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மிதுனம் : மிதுனம் புதனின் சொந்த ராசியாகும். உங்கள் அதிபதி உங்கள் ராசிக்கு மாறுவதால், வீடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். வாழ்க்கையின் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலையை மாற்றத்தை விரும்புபவர்கள், இந்த காலத்தில் அதற்கான முயற்சிகளை செய்யலாம். தந்தையுடனான உறவு மேம்படும்.
சிம்மம் : புதனின் ராசி மாற்றம் உங்களுக்கு எக்கச்சக்க பலன்களை வழங்கும். புதாத்திய யோகத்தின் காரணமாக உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே, செய்த முதலீடுகள் மூலம் லாபம் அடைவீர்கள். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைகளுக்கான சலுகைக் கடிதங்களைப் பெறலாம்.
கன்னி : புதனின் ராசி மாற்றம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். குறிப்பாக உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை காணிப்பீர்கள். பண உயர்வுடன் பதவி உயர்வையும் பெறுவீர்கள். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். உங்கள் வீட்டில் ஏதாவது சுப நிகழ்வுகள் நடக்கலாம்.
துலாம் : புதனின் இந்த ராசி மாற்றத்தால் காதல் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் காதல் வாழ்க்கை திருமணத்திற்கு அடியெடுத்து வைக்கும். எல்லாவிதமான பொருள் இன்பங்களையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு சாதகமான காலம். உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும், லாபம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News