Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 8, 2023

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும்: சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என்றும் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்ந்தியது. இதனால் ரிசர்வ் வங்கி முடிவுகளில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் வேண்டாம் என எம்பிசி குழுவில் 6 இல் 5 பேர் வாக்களித்தனர்.

இதையடுத்து ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவை இன்று வியாழக்கிழமை வெளியிட்டது. சந்தை கணிப்புகளின் படியே, கடந்த கூட்டத்தை போன்று இந்த கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ வட்டி) எந்தவித மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக தொடரும் என ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இதையடுத்து நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை மற்றும் வங்கி வட்டி விகிதங்கள் 6.75% ஆக இருக்கும்.

இதன் மூலமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயர்த்தப்படாது. இதனால் கடனுக்கான மாதாந்திர செலுத்தும் தொகையில் மாற்றம் இருக்காது.

நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம். மேலும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பணவீக்கத்தை 5.1 சதவீததில் இருந்து 4.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்த பணவீக்கம் 5.2 சதவீதத்தில் இருந்து 5.1 குறைக்கப்பட்டுள்ளது என ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 இல் 7.2% வளர்ச்சியைப் பதிவு செய்தது, இது முந்தைய மதிப்பீட்டான 7% ஐ விட வலுவானது. இது தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட அதிக வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. இது 10.1% தாண்டியுள்ளது. அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, 2023-24 ஆம் ஆண்டுக்கான உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5% ஆகமாகவும், சில்லறை பணவீக்கம் 5.2 சதவீதமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே மூன்றாவது வாரத்தில் இருந்து, பணமதிப்பு சரிவு மற்றும் அரசாங்க செலவினங்களின் அதிகரிப்பு அமைப்பு பணப்புழக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் சந்தை நடவடிக்கைகள் மற்றும் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெற்று வருவதால் நாட்டில் பணப்புழக்கம் மேலும் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும்.

வல்லரசு நாடுகளில் நிதியியல் நிலைதன்மை பெரும் கேள்வியாக உள்ளது. இந்திய வங்கியியல் மற்றும் நிதியியல் சந்தை சர்வதேச சந்தை தடுமாற்றத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News