Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 15, 2023

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த டாப் 8 மருத்துவ கல்லூரிகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவர் ஆக வேண்டும் என்பது பலரின் கனவு என்றே சொல்லலாம். நல்ல மருத்துவர்களை நல்ல மருத்துவ கல்லூரிகளே உருவாக்க முடியும். தெருவுக்கு தெரு கல்லூரிகள் கொட்டி கிடக்கையில் நல்ல கல்லூரிகளை எப்படி கண்டுபிடிப்பது? அதற்காகவே தமிழ்நாட்டில் சிறந்த மற்றும் தேசிய தரவரிசையில் (NIRF) முன்னிலை வகிக்கும் மருத்துவ கல்லூரிகளின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம். NIRF தரவரிசைப்படி தேசிய அளவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மருத்துவ கல்லூரி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் 4 கல்லூரிகள் சென்னையை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

1. கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி, வேலூர் (CMC)

வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி தேசிய அளவில் NIRF தரவரிசையில் 3 இடத்தை பிடித்துள்ள கல்லூரி. மருத்துவ கல்வி சேவையில் உலகத்தரம் வாய்ந்த கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள், புதிய ஆய்வுகள் என பல ஆண்டுகளாக சாதனைகள் படைத்து வருகிறது இந்த கல்லூரி.

2. அம்ரிதா விஸ்வ வித்யாபீதம், கோயம்பத்தூர்

கோயம்பத்தூரில் இயங்கி வரும் அம்ரிதா விஸ்வ வித்யாபீதம் இந்திய அளவில் NIRF தரவரிசையில் 6வது இடம் வகித்து வருகிறது. கலை அறிவியல், பொறியியல், விவசாயம் , மருத்துவம் என பல்துறை சார்ந்த கல்வி சேவையை ஆற்றி வெறும் பாரம்பரியம் கொண்ட கல்வி நிறுவனம் இது.

3. சென்னை மருத்துவ கல்லூரி (MMC)

மெட்ராஸ் மருத்துவ கல்லூரி & அரசு பொது மருத்துவமனை 188 ஆண்டுகளாக மருத்துவ துறையில் பல்வேறு பிரபல மருத்துவர்களை உருவாக்கிய பெருமை கொண்டது. தேசிய தரவரிசையில் 11வது இடம் பிடித்து மருத்துவ கல்வியில் முன்னணியில் இருக்கிறது.

4. சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ், சென்னை

சென்னையில் அமைந்துள்ள சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் கல்விநிறுவனம் இந்திய அளவில் NIRF தரவரிசையில் 18வது இடத்தில் உள்ளது. மருத்துவம் மட்டுமின்றி பல்வேறு துறை சார் படிப்புகளில் இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை சர்வதேச தரத்தில் வழங்கி வருகிறது.

5. SRM மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம், சென்னை

சென்னையில் அமைந்துள்ள SRM அறிவியல் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகம் மருத்துவ கல்வியில் தேசிய அளவில் NIRF தரவரிசையில் 20வது இடம் பெற்றுள்ளது. அது மட்டுமின்றி பொறியியல் கல்வியிலும் கூட NIRF தரவரிசையில் 24வது இடம் வகித்து வருகிறது. சர்வதேச தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்பதால் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து மாணவர்கள் இங்கு கல்வி பெறுகின்றனர்.

6. ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம், சென்னை

சென்னையில் இயங்கி வரும் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அதன் மருத்துவமனைகள் நீண்ட காலமாக மருத்துவத்துறையில் சேவையாற்றி வருகின்றது. தேசிய அளவில் NIRF தரவரிசையில் 21வது இடம் வகிக்கிறது இந்த கல்லூரி.

7. பிஎஸ்ஜி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம், கோயம்பத்தூர்

கோயம்பத்தூரில் அமைந்துள்ள பிஎஸ்ஜி கல்வி குழுமம் மருத்துவ படிப்பில் மட்டுமின்றி கலை அறிவியல் உள்ளிட்ட பல்துறை கல்விசேவையில் முன்னிலை வகித்து வருகிறது. தேசிய அளவில் NIRF தரவரிசையில் 40வது இடம் பெற்றுள்ளது பிஎஸ்ஜி கல்வி நிறுவனம்.

8. செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம், செங்கல்பட்டு

செங்கல்பட்டில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் தேசிய தரவரிசையில் 48வது இடம் வகித்து வருகிறது.

சர்வதேச தரம் மற்றும் சிறப்பான கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகளால் கல்வி சேவையில் முன்னணியில் இருக்கிறது இந்த கல்வி நிறுவனம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News