Join THAMIZHKADAL WhatsApp Groups
பிராந்திய ஊரக வங்கிகளில் காலியாக உள்ள 8,612 பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (28.06.2023) முடிவடைகிறது.
இந்த ஆண்டின் மிகப் பெரிய ஆள்சேர்ப்பு நடவடிக்கை இதுவாகும். பொதுத் துறை வங்கி வேலையை தங்கள் கனவாகக் கொண்டவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மொத்த காலியிடங்கள்: 8612
பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை- 1 பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது தகுதிகள்:
அலுவலக உதவியாளர் (பல்துறை பணி) : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2023 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அலுவலர் நிலை 1 (துணை மேலாளர்)- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2023 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அலுவலர் நிலை 2 (மேலாளர்) : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2023 அன்று 32-க்கு கீழும், 21-க்கு மேலும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அலுவலர் நிலை 3 (மூத்த மேலாளர்) : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2023 அன்று 40-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பல்துறை பணிகளுக்கும் , அலுவலர் நிலை- 1 பணிகளுக்கும் ஏதேனும் துறைகளில் இளநிலை (Bachelor Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிலை 1 பதவிகளுக்கு கால்நடை பராமரிப்பு, வேளாண், வேளாண் பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
"Click here to apply online for Rural Banks (RRBs) - CRP RRBs XII" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.
எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
Notification: Recruitment of Officers (Scale-I, II & III) and Office Assistants (Multipurpose) in Regional Rural Banks (RRBs) - CRP RRBs XII
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிராந்திய மொழிகளில் தேர்வு: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சம வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 ஆகிய பணிகளுக்கான தேர்வை தமிழ், கொங்கனி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று 2019-ம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. அப்போதிலிருந்து பிராந்திய மொழிகளிலும் மேற்கண்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment