Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 21, 2023

BEO - வட்டார கல்வி அதிகாரி பணி வயது வரம்பு அதிகரிப்பு

பள்ளிக்கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற வட்டார கல்வி அதிகாரி பணியில், 33 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஜூன் 6ல் ஆன்லைன் பதிவு துவங்கியது.

ஜூலை 5 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பை உயர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பொது பிரிவினருக்கு, 40ல் இருந்து, 42 ஆகவும்: மாற்று திறனாளிகளுக்கு, 50ல் இருந்து, 52 ஆகவும்; மற்ற பிரிவினருக்கு, 45ல் இருந்து, 47 ஆகவும், வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News