Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒரு இலை போதும் இனி சாகும் வரை முழங்கால் வலி முதுகு வலிக்கு குட் பை சொல்லிடுவிங்க!!
குளிர் காலம் ஆரம்பித்த உடனேயே நரம்புகளில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, உடம்பில் உள்ள இணைப்புகளில் எங்கு வலி இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய ஒரு மருந்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி
பூண்டு
கிராம்பு
வெந்தயம்
ஓமம் அல்லது கற்பூரவள்ளி
செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 50 மில்லி லிட்டர் அளவிற்கு கடுகு எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.
இதில் தோலை எடுத்த பூண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் இஞ்சியை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் 5 கிராம்பை சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்தபடியாக முழங்கால் வலியை முக்கியமாகக் குறைக்கும் ஒரு பொருள் ஓமம்.
ஓமம் இல்லை என்றால் கற்பூரவள்ளி இலையை பயன்படுத்தலாம். இப்போது இந்த 2 கற்பூரவள்ளி இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி இந்த எண்ணெயில் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த கற்பூரவள்ளி இலைக்கு பயங்கரமான முழங்கால் வலியை சரி செய்யக்கூடிய சக்தி உள்ளது.
இதையெல்லாம் சேர்த்து நான்கிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும்.
இந்த பொருட்கள் அனைத்தும் நிறம் மாறிய பின் அடுப்பில் இருந்து இறக்கி இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வலி மிகவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ளலாம்.
இந்த ரெமிடியை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்த வேண்டும். வலி இருக்கும் இடத்தில் அதாவது கை, கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, என்று எந்த இடத்தில் வலி இருந்தாலும் அங்கு இந்த எண்ணையை தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்.
இந்த எண்ணையை தேய்த்து விட்டு பிறகு ஒரு காட்டன் துணியையோ அல்லது பிளாஸ்டிக் கவரையோ அதன் மேல் சுற்றி விட்டு தூங்கி விடவும்.
மறுநாள் காலையில் இதை சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த எண்ணையை ஏழு நாளிலிருந்து பத்து நாளைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல தீர்வை கொடுக்கும் .
உடம்பில் காயம் இருக்கும் இடங்களில் இந்த எண்ணெயை தேய்க்க கூடாது. முழங்கால் வலி ஏற்பட காரணம் முழங்காலில் சரியான ரத்த ஓட்டம் இல்லாததுதான்.
இந்த ரெமிடியை பயன்படுத்துவதுடன் யோகா செய்து வர உடம்பில் உள்ள முழங்கால் வலிகள் நிரந்தரமாக குணமாகும்.
No comments:
Post a Comment