Join THAMIZHKADAL WhatsApp Groups
உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பதற்கு எந்தெந்த கீரைகளில் எந்த நோயை தீர்ப்பதற்கு ஆற்றல் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
சிறு சிறு பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் தலை முடி உதிர்வு,வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், சளி, இருமல், வாய்ப்புண், குடல் புண், நெஞ்செரிச்சல், பசியின்மை, தூக்கமின்மை இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த கீரையை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
1. அகத்திக்கீரை
63 சத்துக்கள் நிறைந்த அகத்திக்கீரை பசியின்மையை போக்கும். பித்தம், தொண்டைப்புண், வயிற்றுப்புண், உடல் சூடு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை சாப்பிட்டு வருகையில் முற்றிலும் குணமாகும்.
2. முளைக்கீரை
மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. இதில் தாமிரம் சத்து, இரும்புச்சத்து உள்ளதால் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு இதனை சாப்பிட்டு வருகையில் உடல் ஆரோக்கியமாக காணப்படும்.
3. அரைக்கீரை
வாய்வு கோளாறு, உடல் வலி, தலைச் சூடு, தலைச்சுற்றல், வாந்தி குணமாகும். இதயம் வலிமை பெறுவதற்கு இந்தக் கீரை மிகவும் உதவுகிறது.
4. பருப்பு கீரை
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றலைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருகையில் குடல் புண் அழியும், நெஞ்செரிச்சல் குறையும், நுரையீரல் பலம் பெறுவதற்கு இந்தக் கீரை உபயோகமானதாக இருக்கும்.
5. சிறுகீரை
சிறுநீர் பிரச்சனையை தீர்க்கக்கூடியது. உடல் சூட்டை குறைக்கும், கண் சூடு மற்றும் தலை சூடு குறையும் குறிப்பாக பித்தம் நீங்கும். காசநோய் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இதனை சாப்பிட்டு வருகையில் முற்றிலும் குணமாகும்.
6. முருங்கைக்கீரை
எலும்பு தேய்மானத்தை முற்றிலும் சரி செய்யும். எழுமின் உடைய வளர்ச்சிக்கும் ,வலிமைக்கும் முருங்கைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்க இதற்கு முக்கிய பங்கு உள்ளது. வயிற்றுப்புண் ஆறுவதற்கு உதவுகிறது.
7. தூதுவளைக் கீரை
ஆஸ்துமா பிரச்சனைக்கு நிவாரணம் தரக்கூடிய கீரை. இந்தக் கீரையை கஷாயமாகவோ அல்லது துவையலாகவோ, சூப்பாகவோ எடுத்துக் கொண்டு வரலாம்.
8. பசலைக்கீரை
இரத்த சோகைக்கு தீர்வு தரக்கூடியது. நீரிழிவு நோய் உள்ளவர்கள், காலில் நீர் கோர்த்து கால் வீக்கம் விரல் வீக்கம் உள்ளவர்கள், ரத்த குறைபாடு உள்ளவர்கள் இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருகையில் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.
9. வெந்தயக்கீரை
நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து. கண்பார்வை குறைபாடு, சொறி சிரங்கு, நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இவர்களெல்லாம் இந்த வெந்தயக் கீரையை பயன்படுத்தி இந்த பிரச்சினையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி பெறுங்கள்.
10. முடக்கத்தான் கீரை
மூட்டு வலியை போக்கக்கூடியது. இந்தக் கீரையை மூட்டு வலி ஆரம்பகாலங்களில் எடுத்துக் கொள்ளும் பொழுது சில நாட்கள் இல்லை முற்றிலும் குணமாகும். கால்கள் வலுப்பெற்று கால் வலி என்பது கட்டாயம் வராது. சிறுவயதிலிருந்தே இந்த கீரையில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சூப்பு போல் எடுத்துக் கொள்கையில் மூட்டு வலி, கை கால் வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
No comments:
Post a Comment