Join THAMIZHKADAL WhatsApp Groups
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலையின், 2023 - 24ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.முதல் பிரிவில், ஹைதராபாத் நாராயணா ஜூனியர் கல்லுாரியைச் சேர்ந்த பழுவாடி தினேஷ் மணிதீப், தேசிய அளவில், 99.17 சதவீதம் பெற்று, முதலிடம் பெற்றார். அவர், பிளஸ் 2 தேர்வில் 987 மதிப்பெண்ணும், ஜே.இ.இ., மெயின் தேர்வில், 99.65 சதவீதமும் பெற்றுள்ளார்.அதைத் தொடர்ந்து, திருப்பதி ஸ்ரீ சைதன்யா ஜூனியர் கல்லுாரியின் சப்பிடி குலதீப் ரெட்டி, 98.85 சதவீத மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இரண்டாம் பிரிவில், பாலக்காடு, சந்திரா நகர், பாரதமாதா மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த அபிஜித், 100 சதவீதம் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
திருச்சி செல்லம்மாள் மெட்ரிக்குலேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ரோஷினி பானு, இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சாஸ்த்ராவில் சேரும் மாணவர்களுக்கு, 100 சதவீதம் கல்வி உதவித் தொகை, இலவச தங்கும் வசதியும் வழங்கப்படும். விரிவான தரவரிசைப் பட்டியல்கள், www.sastra.edu என்ற இணையதளத்தில் உள்ளன. தமிழகம், ஆந்திர பிரதேசம், கோவா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, 34,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சாஸ்த்ராவின் வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான சேர்க்கை முறை, பெற்றோரின் பாராட்டை பெற்றுள்ளது. மேலும், ஆக., 7ம் தேதி முதல் வகுப்புகள் துவக்கப்படும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment