தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் வேளாண்மை (ஆங்கில வழி, தமிழ் வழி), தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழியில் (www.tnagfi.ucanapply.com) விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூன் 9-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment