Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒருமுறை சர்க்கரை நோய் வந்தால், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோய் இருந்தால் இனிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும். சில ஆயுர்வேத பொருட்களை சாப்பிடுவதன் மூலம் குளுக்கோஸின் அளவை நிர்வகிக்க முடியும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மிக எளிதாக கிடைக்கும் சில மூலிகை பொருட்களைக் கொண்டே நீரிழிவு பிரச்சனையை திரன் பட சமாளிக்கலாம்.
உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் 3 பயனுள்ள ஆயுர்வேத பானங்கள்
உலகளவில் இறப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நீரிழிவு நோய். இந்த நிலை 2030 ஆம் ஆண்டளவில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சில வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலமும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயுடன் வாழ்வது எளிதானது அல்ல. இது ஒரு நாள்பட்ட நோயாகும், இது கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது ஏற்படும். ஆனால் சில ஆயுர்வேத மூலிகைகளின் உதவியுடன் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். எனவே, ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கும் சில பயனுள்ள மூலிகைகளைப் பட்டியலிட்டார். மேலும், அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள எளிதான வழியையும் பரிந்துரைத்தார்.
நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் 3 ஆயுர்வேத மூலிகைகள் / உணவுகள்
1. தனியா
தனியா அல்லது கொத்தமல்லி விதைகள், கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதன் மூலம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது
தனியா பானத்தை தயாரிக்கும் முறை:
தனியா அல்லது கொத்தமல்லி விதை நீர் தயாரிக்க, 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை 100 மில்லி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
2. வெந்தயம்
வெந்தையத்தில் அமினோ அமிலம், 4-ஹைட்ராக்ஸிசோ-லூசின் உள்ளது. இது மனிதர்களின் கணைய செல்களில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. வெந்தயத்தில் 50-சதவீதம் நார்ச்சத்து உள்ளது (30-சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் 20-சதவீதம் கரையாத நார்ச்சத்து).
வெந்தய நீர் தயாரிக்கும் முறை:
வெந்தய நீர் தயாரிக்க, 1 கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்வது சிறப்பு
3. இலவங்கப்பட்டை
இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் இருந்து உயிரணுக்களுக்குச் சர்க்கரையின் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் இரத்தச் சர்க்கரையைக் குறைக்கவும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது, மேலும் உயிரணுக்களுக்கு சர்க்கரையை கொண்டு செல்வதில் இன்சுலின் உதவுகிறது.
இலவங்கப்பட்டை நீர் தயாரிக்கும் முறை
இலவங்கப்பட்டை நீர் தயாரிக்க ஒரு பாத்திரத்தில், சிறிது சூடான பால், 1 சிட்டிகை புதிதாக பொடி செய்த இலவங்கப்பட்டை தூளை சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதனை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்வது சிறப்பு.
No comments:
Post a Comment