Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 18, 2023

ஆதார் கார்டில் இவை தவறாக இருந்தால் இனி போன் பே, கூகுள் பே பயன்படுத்த முடியாது.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர், பெயர், முகவரி போன்ற விவரங்கள் தவறாக இருந்தால், இனி போன் பே, கூகுள் பே, போன்ற பணப்பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த முடியாமல் போகலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியாவிலுள்ள மக்களின் முக்கிய அடையாளமாக இருப்பது ஆதார் கார்டுதான். இதைப் பயன்படுத்தியே அரசு வழங்கும் சலுகைகளை மக்கள் பெறுகின்றனர். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஒருவேளை உங்களுடைய ஆதார் கார்டில் ஏதாவது தவறாக இருந்தால் அதை முடிந்த வரை விரைவாக மாற்றிவிடுங்கள். அப்படி இல்லையெனில் எதிர்காலத்தில் கட்டாயம் ஏதாவது பிரச்சினை வர வாய்ப்புள்ளது. இதுவரை ஆதார் கார்டில் ஏதாவது தவறாக இருந்தால் அதை மாற்றுவதற்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், மக்கள் ஆதார் கார்டில் உள்ள தவறைத் திருத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. எனவே, இந்திய அரசாங்கம் அதிரடி சலுகைகளை வழங்க முடிவு செய்தது. இதன்படி இணையத்தில் ஆதார் அட்டை விவரங்களை மாற்ற விரும்புவர்கள் ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தனர்.

இந்த அவகாசம் முடிந்த நிலையில், ஜூலை 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் கார்டில் மாற்றம் செய்பவர்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது புதியதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இலவசமாக ஆதார் அட்டையில் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தனது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆதார் கார்டுகளை வாங்கியிருப்பின், தற்போது 15 வயது எட்டிய பிறகு அவர்களின் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் கார்டில் எந்த மாற்றம் செய்ய வேண்டுமாக இருந்தாலும், அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.

வரும் காலங்களில் போன் பே கூகுள் பே போன்ற பணப்பரிமாற்றம் செய்யும் செயல்களில் வெரிஃபிகேஷன் செய்வதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப் படலாம் எனச் சொல்லப்படுகிறது. எனவே ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தவறாக இருப்பின், அந்த செயலிகளில் வெரிஃபிகேஷன் செய்யும்போது பிரச்சனை ஏற்படும் என்பதால், அந்த செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, ஆதார் கார்டில் அனைத்தும் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News