Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 15, 2023

இக்னோவில் நிகழாண்டுக்கான பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் நிகழாண்டு ஜூலை 2023 பருவத்துக்கான பட்டப்படிப்பு சோ்க்கைக்கு இணையதள வழியில்விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முதுநிலை மண்டல இயக்குநா் முனைவா் கே பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால் ( NAAC) A++ தர அங்கீகாரம் பெற்ற இந்திய அரசின் கல்வி துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு நிகழாண்டு ஜூலை-2023 பருவத்திற்கான பட்டப்படிப்பு சோ்க்கை இணையதள வழியாக நடைபெறுகிறது.

தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன்வழி படிப்புகளில் சேரவிரும்புவோர் www.ignouadmission.samarth.edu.in (தொலைதூரக் கல்வி படிப்புகள்), www.ignouiop.samarth.edu.in (ஆன்லைன்வழி படிப்புகள்) ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அனைத்து படிப்புகளுக்கும் இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி ஆகும்.

அனைத்து பாடத்திட்டங்களுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளம்: https://ignouadmission.samarth.edu.in/index.php/site/index மூலமாகவோ அல்லது 044-26618040 என்ற தொலைபேசி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

July 2023 Admission Cycle - Last date for submission of Application: 30 June 2023




Important Links




Admission Portal for ODL Programmes: https://ignouadmission.samarth.edu.in/




Admission Portal for Online Programmes: https://ignouiop.samarth.edu.in/




Admission Portal for Fixed Learner Intake Programmes: https://ignouflip.samarth.edu.in/




Student Portal (after admission): https://ignou.samarth.edu.in/

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News