Join THAMIZHKADAL WhatsApp Groups
சூரியன் இன்று மாலை 6.07 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார்.
இந்த நேரத்தில், சூரியனின் இந்த பெயர்ச்சி பல ராசி அறிகுறிகளுக்கு தொழில் ரீதியாக மிகவும் நல்ல பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது. ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். மறுபுறம், கடக ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சூரியனின் சஞ்சாரத்தால் அசுப பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம் : உங்கள் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். தொழில் ரீதியாக பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். யோசிக்காமல் நீங்கள் வெளிவிடும் வார்த்தையால், மன கசப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு மோசமாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்படலாம்.
மிதுனம் : சூரியன் உங்கள் ராசியின் முதல் வீட்டிற்கு செல்கிறார். இந்த கால கட்டத்தில் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் கடுமையான பேச்சால் உறவுகள் பாதிக்கப்படும். இக்காலத்தில் அதிக ஆற்றலுடன் நீங்கள் இருந்தாலும், அதனால் நன்மைகளை விட தீமைகளையே பெறக்கூடும். குடும்ப உறவுகளில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
துலாம் : உங்கள் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால், உங்கள் வாழ்வில் திடீரென்று பல பிரச்சனைகள் வரும். தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும். ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பயணம் மேற்கொள்ளும் போது உங்களின் உடைமைகளை இழக்க நேரிடும். தொழிலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம் : சூரியன் உங்கள் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால், உங்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்காது. வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வழக்கு தொடர்பான சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு : சூரியன் உங்களின் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால், குடும்பத்தில் சண்டைகள் வர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரக்கூடும். உங்கள் வேலையில் எடுக்கும் சில தவறான முடிவுகளால் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. தொழிலில் நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு ரிஸ்க்கையும் இக்காலத்தில் எடுக்காதீர்கள். உங்களை யாரேனும் ஏமாற்றலாம், சற்று உஷாராக இருப்பது நல்லது.
No comments:
Post a Comment