தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இருப்பினும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையவில்லை. எனவே பள்ளிகள் திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரும் ஜூன் 12-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளான 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி திறக்கப்படுகின்றன. கோடை வெயிலின் தாக்கம் குறையாததை அடுத்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியபின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment