திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
அதில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திருமலைக்கு அளிபிரி மலை பாதை வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்தப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஐந்து வயது சிறுவனை வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இழுத்துச் சென்றது. அந்த சிறுவனை சிறுத்தை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதிக்குள் கொண்டு சென்ற நிலையில் அதன் பிறகு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனப்பகுதி ஊழியர்கள் சத்தமிட்டு சிறுவனை காப்பாற்றினர்.
இந்த சம்பவம் திருப்பதி வரும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தேவஸ்தானம் தற்போது முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது அலிப்பிரி மலைப்பாதையில் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். குழந்தைகளை குழுவின் நடுவே பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். இந்தப் பாதையில் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment