பொதுவாக நமக்கு ஒரு நாள் நல்ல விஷயங்கள் நடந்தால் காலையில் எழுந்தவுடன் யார் முகத்தை பார்த்தோமோ அந்த ராசிதான் காரணம் என்று நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
உள்ளங்கை பார்த்தல்
காலை எழுந்த உடல் உங்கள் உள்ளங்கைகளை பார்ப்பது மகாலட்சுமியின் ஆசி கிடைக்க வழி வகுக்கும்
நாணயங்கள் பார்த்தல்
காலை எழுந்தவுடன் குவித்து வைக்கப்பட்டுள்ள நாணயங்களை பார்ப்பது மிகவும் நல்லது. அது நாள்முழுவதும் பணத்தட்டுப்பாடு இல்லாமல் நம்மை வைத்துக்கொள்ளும். காலப்போக்கில் வாய்பிருந்தால் தங்கம், வெள்ளி நாணயங்களை பார்ப்பது ஐஸ்வர்யம்பெருக உதவும்.
மஞ்சள் குங்குமம் சந்தனம் பார்த்தல்
காலையில் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை பார்ப்பது நாள் முழுவதும் மங்கல செய்திகளை கேட்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.
மலர் பார்த்தல் - நித்தியக்கல்யாணி
காலை எழுந்தவுடன் செடி முழுவதும் பூத்துக்குழுங்கும் நித்தியக்கல்யாணி மலர்களை பார்ப்பது மிகவும் விசேஷம். இந்த நித்தியக்கல்யாணி செடியை வீட்டில் வளர்ப்பது தினமும் நல்லது நடக்க உதவும் என கூறப்படுகிறது. நாள் முழுவதும் சுபிக்ஷம் தர உதவும். உங்கள் வாழ்வில் முக்கியமான காரியங்களுக்க செல்லும் போது நித்திய கல்யாணியை உடன் கொண்டு செல்வதால் தடைகள் நீங்க உதவும் என்று கூறப்படுகிறது.
சங்குப்பூ
மிக மிக சக்தி வாய்ந்த ஒரு பூ. மகாவிஷ்ணுக்கு பிடித்த பூ. மகாலெட்சுமிக்கு மிகவும் உகந்த பூ. சனீஸ்வர பகவானுக்கு மிகவும் பிடித்த கருநீல சங்குப்பூவில் காலை எழுந்தவுடன் கண்விழிப்பதால் சோதனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.
பசுந்தாவரங்கள்
பசுமை நிறைந்த தாவரங்களை பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சி தரும். அது நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக உணரச் செய்து மனதிற்கு இதம் தரும். அது மட்டும் இல்லாமல் அன்று முழுவதும் நமக்க நல்ல விஷயங்கள் நடக்க அது உதவும்
கண்ணாடி
காலையில் எழுந்தவுடன் சிரித்த முகத்துடன் கண்ணாடி பார்ப்பது மிகவும் விஷேசமாக பார்க்கப்படுகிறது. இதுவும் அன்றைய நாளில் நமக்கு நன்மை சேர உதவும்.
வானம் பார்ப்பது
காலையில் எழுந்த உடன் வானம் பார்ப்பது பெரும் நன்மை பயக்கும். அதிகாலையில் பிரபஞ்சத்தை பார்த்து நம் கவலைகளை பகிர்ந்து கொள்வது நமக்கு நல்லது நடக்க உதவும் என கூறப்படுகிறது.
குழந்தை முகம் பார்ப்பது
காலையில் எழுந்தவுடன் கள்ளங்கபடங்கள் அற்ற குழந்தைகளின் முகத்தை பார்ப்பது மிகவும் விசேஷம். குழந்தையை போன்ற துன்பங்கள் அற்ற நாளாக அன்றைய நாள் அமைய உதவும்.
No comments:
Post a Comment