Join THAMIZHKADAL WhatsApp Groups
இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதிலும் பாதாம் அதிகம் சத்து மிக்கதாக பார்க்கப்படுகிறது. அபாதம் பருப்பில் (Almonds) எண்ணிலடங்கா பல சத்துக்கள் உள்ளன. பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஊறவைத்த மற்றும் தோலுரித்த பாதாம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இது நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய பல நன்மைகள் மற்றும் அதிக ஊட்டச்சத்து மதிப்புக்காக பாதாம் பருப்புகள் என்றும் விரும்பி எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மேலும், இது செரிமானத்திற்கு உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இப்படி இதன் ஆரோக்கிய நலன்களின் பட்டியல் நீண்டுன் கொண்டே போகும்.
பாதாம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை தந்து பசியில்லாமல் வைத்திருப்பதன் மூலம் பசியைக் குறைக்கிறது. இதனால், பாதாம் ஒரு சரியான எடை இழப்பு உணவாகவும் கருதப்படுகிறது, பல ஆய்வுகள் பாதாம் தினமும் சாப்பிடுவது அதிக எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது. இது எடை இழப்பை ஊக்குவிக்கும் வகையில், வயிறு நிறைந்த திருப்தியை அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியமற்ற சிற்றுண்டி பழக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
இருப்பினும், அடிக்கடி, அதிக பட்ச பலனை பெற, பாதாம் பருப்பை பச்சையாக சாப்பிட வேண்டுமா அல்லது இரவில் ஊறவைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு தொழில்முறை மற்றும் அனுபவம் வாய்ந்த எடை இழப்பு பயிற்சியாளரான டாக்டர் ஸ்னேகல் அட்சுலே, (Dr Snehal Adsule) தனது இன்ஸ்டாகிராம் கணக்கி வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் இது குறித்து கூறியுள்ளார்.
எடை இழப்புக்கான பாதாம்: பாதாம் பருப்பா அல்லது ஊறவைத்த பாதாமா
பாதாம் தோலில் பாலிபினால்கள் இருப்பதால் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்கிறார் டாக்டர் அட்சுலே. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து ஒரு நபரை விடுவிக்கிறது. மேலும், பாதாம் தோலுடன் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிப்பதில்லை, மாறாக நன்மை பயக்கும் என்று டாக்டர் சினேஹல் உறுதியளிக்கிறார்.
பச்சை பாதாம்
டாக்டர் ஸ்நேஹல் இன்ஸ்டாகிராமில் மதிப்புமிக்க மற்றும் தகவலறிந்த வீடியோக்கள் மற்றும் இடுகைகளைப் பகிர்ந்து கொள்கிறார். தோலுரிக்கப்பட்ட அல்லது உரிக்கப்படாத பாதாம் குறித்த வீடியோவில், ஒரு சில பாதாம் பருப்புகளை சிற்றுண்டி சாப்பிடுவது எப்படி தின்பண்டங்களை உண்ணும் ஆர்வத்தை அழிக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டி பழக்கங்களை உடைக்கும் என்பதை அவர் பகிர்ந்து கொள்கிறார். "உங்கள் பாக்கெட்டில் பச்சை பாதாமை வைத்திருங்கள், ஒவ்வொரு முறையும் வேலையின் போது அல்லது சலிப்பு காரணமாக நீங்கள் பசியாக உணர்கிறீர்கள், அதிசய கொட்டைகளை சிற்றுண்டியாக சாப்பிடுங்கள்" என்று எடை இழப்பு பயிற்சியாளர் பகிர்ந்து கொள்கிறார்.
பாதாம் பால்
சைவ உணவு பொருட்கள் மற்றும் பானங்கள் இப்போது சந்தையில் அதிகம் கிடைக்கின்றன. அதில், லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு பாதாம் பால் ஒரு சிறந்த தேர்வாகும். இது பல்பொருள் அங்காடிகளில் இருந்து வாங்கலாம் அல்லது எந்தவொரு கடினமான செயல்முறையும் இல்லாமல் வீட்டில் எளிதில் தயாரிக்கப்படலாம். டாக்டர் ஸ்னேஹல் அட்சுல், பாதாம் பருப்பை நம் அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்வதன் நன்மைகளை மேலும் வலியுறுத்துகிறார். சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து வறுத்த பாதாம் எட்சையை குறைக்க மற்றொரு சிறந்த வழி என்கிறார்.
No comments:
Post a Comment