மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, வாயு தொந்தரவு போன்றவை வருவது அவ்வப்போது நமக்கு வருவது ஒரு சாதாரண நிகழ்வு. இதற்கு முக்கியமான காரணம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, கண்ட கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், உணவு உண்ட உடனே படுத்துக் கொள்ளுதல், தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றை பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் சாப்பிடுவது போன்றவை காரணங்களாகும்.
இது போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல் சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளிலேயே நிவாரணம் பெறலாம்.
** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கி சிறிது நேரம் ஆறவிட்டு ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். குடிக்கிற சூடு வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக உள்ளது அதனால் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் என சேர்த்தக் கூடாது.
** அடுத்ததாக இதில் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இறுதியில் சுவைக்கு சிறிது இந்து உப்பு சேர்த்து கலக்கவும். இந்துப்பு இல்லையெனில் சாதாரண உப்பை கூட சேர்த்துக் கொள்ளலாம். இதை காலை வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.
** இதைக் குடித்த அரை மணி நேரத்தில் உங்களது மலச்சிக்கல் பிரச்சனை சரியாகி வயிறு சுத்தமாவதை உணரலாம். இதை அடிக்கடி குடிக்க கூடாது. மிகவும் தீவிரமாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளபோது மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
** பெரும்பாலும் இதனை விடுமுறை நாட்களில் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் சிலருக்கு 2 அல்லது 3 முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அவர்கள் ஒரு டம்ளர் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தயிர் புளித்து இருக்கக் கூடாது.
No comments:
Post a Comment