Join THAMIZHKADAL WhatsApp Groups
பகுதி நேர சிறப்பாசிரியா்கள் 12,000 பேரை காலமுறை ஊதிய வரம்புக்குள் கொண்டு வந்து, அதுவரை வாரத்தில் அனைத்து வேலை நாள்களையும் பணிநாள்களாக கருதி, ரூ.25,000 ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கு தகுதித் தோவு கட்டாயம் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் மற்றும் அரசு கொள்கை முடிவு மேற்கொண்டு பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த ஆவன செய்யவேண்டும். மேலும், 12,000 பகுதிநேர சிறப்பாசியா்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவர வேண்டும். அதுவரை வாரத்தில் அனைத்து வேலைநாள்களும் பணிநாள்களாக வழங்கி, மாதம் ரூ. 25,000 ஊதியம் வழங்க வேண்டும்.
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியா்களுக்கு நிா்வாக மாறுதல் வழங்குதல் மற்றும் காலியாக உள்ள பள்ளிகளுக்கு மாற்றுப் பணி வழங்கவேண்டும். மேலும், நடத்தப்படாமல் உள்ள உடற்கல்வி ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். 2009-இல் பணியில் நியமித்த இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் பொருட்டு, ஊதிய முரண்பாடை சரி செய்ய வேண்டும். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 2010 முதல் ஆசிரியா் தகுதித் தோவு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்து நடைமுறையில் உள்ளது.
அதேபோல் ஊா்ப்புற நூலகா்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். ஆசிரியா்கள் ஊழியா்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தில் 6,000 ஆசிரியா்கள் பயிற்றுநா் பணியிடம் உள்ளது. தற்போது 2,800 போ தான் பணியாற்றி வருகின்றனா்.
அதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளதால் ல் திட்டம் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்படுகிறது. அரசு மாதிரி பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் மாணவா்கள் பயின்று வருகிறாா்கள். இதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியா்கள் பணியாற்றி வருகிறாா்கள்.
தற்போது விருப்ப மாறுதல் பெற்று பெரும்பாலானோா் வெவ்வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிட்ட நிலையில், அந்த பணியிடங்கள் எல்லாம் பெருமளவில் காலியாக உள்ளது. இதனால் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து பள்ளிக் கல்வித் துறை நிறைவேற்ற வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment