சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும் ஒரு அருமையான மருந்தை எப்படி தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்.
* கொய்யா இலைகள்
* மிளகு
* கிராம்பு
* தயிர்
* எலுமிச்சம்பழம் மற்றும் ஊற வைத்த தண்ணீர்
குறிப்பு: எலுமிச்சம் பழத்தை அறுத்து சுடு தண்ணீரில் ஊறவைத்து எலுமிச்சம் பழம் மற்றும் அதன் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மருந்தை தயார் செய்யும் முறை.
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள கொய்யா இலைகளை ஒன்றின்டாக கிழித்து மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் ஊறவைத்த எலுமிச்சம்பழ்தையும் அதன் தண்ணீரையும் இதில் சேர்த்துக் கொள் வேண்டும். பின்னர் இதில் மிளகு மற்றும் கிராம்பு சேர்த்துக் கொண்டு நன்கு அரைத்து எடுத்துக் கோள்ள வேண்டும். இதை வடிகட்டி ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கிளாசில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள அந்த கலவையை தயிரில் சேர்த்து குடிக்கலாம்
No comments:
Post a Comment