எத்தனைக் கடன் இருந்தாலும் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்து பாருங்க... கடன் தொல்லை சீக்கிரமாக முடிவுக்கு வரும்.
செவ்வாய்கிழமை விசேஷமான நாள். எவ்வளவு சம்பாதித்தாலும், கூடவே செலவும் சேர்ந்து வருகிறது. மாத கடைசியில் பர்ச்சை பல் இளிக்கிறது என்கிறீர்களா? நாம கொடுத்த நூறு, ஐநூறு ரூபாய் கடன் கூட திரும்பி வரவே மாட்டேங்குது. ஆனா நாம வாங்குகிற கடன் நம்ம தூக்கத்தைக் கெடுக்கிறது என்பது தான் பிரச்சனையா? உங்களோட கடன் பிரச்சனைகள் எல்லாம் விரைவில் கற்பூரம் போல கரைந்து போக, செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து இந்த வழிப்பாட்டைச் செய்து பாருங்க. அதன் பிறகு உங்க செல்வ நிலையும் உயரும். செவ்வாய் வெறும் வாய் என்பது பழமொழி. ஆனால் இதன் உண்மையான அர்த்தம் செவ்வாய் கிழமைகளில் வெறும் வாயாக அன்னம் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அம்பிகையை மனமுருகி பிரார்த்தனை செய்திட, அதன் பிறகு செய்கிற காரியம் வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்.
ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருள்கள் வாங்கும் வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு. எடுத்ததெற்கெல்லாம் இப்படி நாளும் கிழமையும் பார்க்கலாமா என்று நினைத்ததை, நினைத்தப்படி நடத்திக் கொள்கிறவர்களும் உண்டு. ஜோதிடங்களை முழுமையாக நம்பவில்லை என்றாலும் அவை எல்லாம் விஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை .
திங்கள், புதன், வியாழன், வெள்ளி நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள். அதிலும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழியை வைத்து புதன்கிழமை மட்டுமே நல்ல நாள் என்று நினைப்பவர்களும் உண்டு.ஆனால் நல்ல நாளாக இருந்தாலும் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள் வரும் நாள்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய்கிழமையும் உகந்த நாள். நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். செவ்வாய்க் கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுப்பலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான்.
மெளன அங்காரக விரதம் ஒன்று உண்டு. தர்மசாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது. அதாவது செவ்வாய்க் கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ வெறும் வாயோ என்று, அன்றைய தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்வது.
இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர்.
அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால்தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும்.மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று கூறுவதுண்டு. இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும்.
No comments:
Post a Comment