Join THAMIZHKADAL WhatsApp Groups
*வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதனை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
*வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.
*ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.
*சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மேலும், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது.
*வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு.
*மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்
கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
*வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.
*பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.
*வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.
*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
No comments:
Post a Comment