Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த காலத்தில் மருக்கலால் பலரும் சிரமப்படுகின்றனர்.
நூற்றில் 20 பேருக்கு இந்த மருக்கள் உள்ளது. மருவினால் நமக்கு எந்த ஒரு வலியோ வேதனையோ இல்லாமல் இருந்தாலும் அது நம் அழகை மிகவும் குறைத்து காட்டுகிறது. இந்த மரு முகத்தில் மட்டுமல்லாமல் கை, கால்களில் மற்றும் கழுத்திலும் காணப்படுகிறது.
இது பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வரக்கூடியது. இந்த மருவை போக்குவதற்காக சிலர் நெருப்பை வைப்பார்கள் அல்லது அதை கத்தியால் அறுப்பார்கள் இவ்வாறு செய்வதால் அந்த மருவை குறைந்த நாட்களுக்கு மட்டுமே வராமல் தடுக்க முடியும் வாழ்நாள் முழுவதும் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இந்த மரு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும். மேலும் இந்த மறு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இந்த மருவை போக்க ஒரு ஈஸியான மருந்தை இங்கு தெரிந்து கொள்வோம். செய்முறை: இதை செய்வதற்காக ஆறிலிருந்து ஏழு பற்கள் வெள்ளைப் பூண்டு எடுத்துக்கொள்ளவும்.
அதன் தோலை எடுத்துவிட்டு நன்கு இடித்து பேஸ்ட் ஆக செய்து கொள்ளவும். இவ்வாறு இடித்த இந்த பேஸ்ட்டை வடிகட்டி வைத்து அதன் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சையை பிழிந்து விடவும். இதனுடன் ஒரு பின்ச் அளவு பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மரு இருக்கும் இடத்தில் நாம் செய்த இந்த ரெமிடியை அப்ளை செய்யவும். மருவின் மேல் இதை அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். ஒரு மணி நேரம் கழித்து அந்த இடத்தை கழுவி விடவும். இதுபோல் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் செய்து வர மரு தானாகவே உதிர்ந்து விடும்.
No comments:
Post a Comment