Join THAMIZHKADAL WhatsApp Groups
தொடக்க கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தொடக்க கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. விண்ணப்பம் பதிவு செய்ய ஜூலை 5ம் தேதி கடைசி நாள். https://www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10 தேதி நடக்க உள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.சிஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300. தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வாக 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்க இருக்கிறது. இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் 20 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment