சிறந்த கல்வி நிறுவனத்துக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், சென்னை ஐஐடி முதலிடமும், இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு இரண்டாமிடமும், தில்லி ஐஐடி மூன்றாமிடமும் பெற்றுள்ளது. இதையும் படிக்க | டாப் 10 சிறந்த பல்கலை.: தமிழகத்தின் 2 பல்கலைக்கழகம் தேர்வு! ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், எய்ம்ஸ் தில்லி, ஐஐடி கராக்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி குவஹாட்டி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறையே முதல் பத்து இடங்களை பெற்றுள்ளது.
மேலும், சிறந்த பொறியியல் கல்லூரிக்கான பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதையும் படிக்க | நாட்டின் டாப் 10 கல்லூரிகள்: தமிழகத்தின் 3 கல்லூரிகள் தேர்வு! தொடர்ந்து 5-ஆவது முறையாக நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வாகியுள்ளது.
No comments:
Post a Comment