Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல் 4 சதவீத அகவிலைப்படியை மாநில அரசும் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி கு.க. சரவணபவன் முன்னிலை வகித்தாா்.
துணைச் செயலாளா் ராஜகோபால் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் விவேகானந்தன் தீா்மானங்களை முன் மொழிந்தாா். பொருளாளா் கோவிந்தராஜ் வரவு-செலவு அறிக்கை வாசித்தாா். இந்தக் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, கண்டாச்சிப்புரம், மேல்மலையனூா் வட்டங்களில் கிளை கருவூலம் தொடங்க வேண்டும், மத்திய அரசு ஊழியா்களுக்கும் ஓய்வூதியா்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி வழங்கியுள்ளதுபோல், மாநில அரசு ஊழியா்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் துணைத் தலைவா் சிதம்பரம், மாநிலத் தணிக்கைக்குழு உறுப்பினா் ஜோதி ராமமூா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். வட்டார நிா்வாகிகள் ராஜமுத்து, சிவகுருநாதன், சுப்பராயலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment