நமது உடலில் இதயம் மூளைக்கு அடுத்தபடியாக கல்லீரலை கூறலாம்.கல்லீரல் மனித உடலில் காணப்படும் முக்கிய உள் உறுப்பாகும்.
இதுவே உடல் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பாகவும் திகழ்கிறது.
மிகவும் சென்சிடிவ் உறுப்பான கல்லீரல் நமது உடலில் பர்பல வேலைகளை செய்கிறது.கல்லீரல் நீர்மம் சுரக்கும் சுரப்பியாகவும் உள்ளது.
புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதிப் பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற மிக முக்கியமான பணி கல்லீரலில் நடைபெறுகிறது.
இது சர்க்கரை,கொழுப்பு ,இரும்பு சத்து போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அதே நேரத்தில் கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அதனை கல்லீரல் நோய் என்பார்கள்.
இந்த நோய் ஏற்படுவதை உடல் நலக்குறைவு, வாந்தி,மயக்கம்,களைப்பு, எடை குறைவு போன்ற பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்நோயால் கல்லீரலில் உள்ள 75க்கும் மேலான கல்லீரல் திசுக்கள்
சேதம் அடையும். கல்லீரல் முழுவதுமாக சேதம் அடைந்தால் வேறு கல்லீரலை அறுவை சிகிச்சை முறையில் மாற்றம் செய்யக்கூட வாய்ப்புள்ளது.
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழம், இஞ்சி, கிராம்பு, எலுமிச்சை பழம்
செய்முறை
முதலில் தோல் நீக்கி ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் சிறிதளவு இஞ்சியை அதன் தோலை நீக்கிவிட்டு சிறியசிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை வடிகட்டி ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் நான்கு அல்லது ஐந்து துண்டு கிராம்பை நன்கு பொடி தாக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும்.
இதனை குடித்தால் கல்லீரலில் உள்ள அசுத்தங்கள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனை வாரம் ஒரு முறை கட்டாயமாக குடிப்பதன் மூலம் கல்லீரலில் உள்ள பிரச்சனையை சரி செய்து விடலாம்.
No comments:
Post a Comment