வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது. இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து சாறெடுத்து சூப்பு செய்து அருந்தலாம்.
கொள்ளில் இரும்புச்சத்து அதோடு பாஸ்பரஸ், புரதம் ,கால்சியம் ,போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இதனால் ஆண்கள் கொள்ளை உணவில் சேர்க்கும் பொழுது விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண் மலட்டு தன்மையை நீக்கும். விந்தணுக்கள் குறைவாக உள்ள ஆண்கள் வாரம் மூன்று முறை உணவில் கொள்ளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
குக்கரில் கொள்ளுவை சேர்த்து நான்கு மடங்கு அளவு தண்ணீர் விட்டு 6 முத 8 விசில் வரை விடவும். பிறகு இந்த நீரை மட்டும் மேலாக எடுத்து உப்பு சேர்த்து குடிக்கவும். வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும். தினமும் ஒரு கப் குடித்தால் போதுமானது.
தேவையான பொருட்கள்
1. கொள்ளு - அரை கப்
2. மிளகாய் வத்தல்
3. எண்ணெய் - 4 டீஸ்பூன்
4. புளி - சிறு துண்டு
5. பூண்டு - 4 பல்
6. தேவையான உப்பு
செய்முறை:
ஒரு வாணலியில் அரை கப் கொள்ளை எடுத்து வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல், உளுந்து இரண்டையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் வறுத்த மிளகாய், உளுந்து, கொள்ளு, தேங்காய் துருவல், சிறு துண்டு புளி, உப்பு, தேவையான தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த துவையலை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வருவதில் உடல் எடை அற்புதமாக குறைவதை கண்டு மகிழ்வீர்கள்.
No comments:
Post a Comment