சமீப காலங்களில் எல்.இ.டி விளக்குகளின் மவுசு படு வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் இதை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஆனால் இந்த விளக்குகளின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இவற்றின் ஆரம்ப விலை ரூ.300 மட்டுமே.
சந்தையில் இரண்டு வகையான எல்.இ.டி விளக்குகள் உள்ளன. ஒன்று மின்சாரத்தில் இயங்குவது மற்றொன்று சூரிய சக்தியில் இயங்கும் வகை. வீட்டைச் சுற்றி தானியங்கி விளக்குகள் தேவைப்பட்டால், சூரிய சக்தியில் இயங்கும் எல்.இ.டி விளக்குகளை தேர்வுசெய்யலாம்.
சந்தையில் இந்த எல்.இ.டி விளக்குகளின் விலை ரூ.300 முதல் ரூ. 500 வரை. அதோடு இவை Amazon மற்றும் Flipkart தளத்திலும் கிடைக்கின்றன.
பிரபல பிலிப்ஸ் நிறுவனம் மோஷன் சென்சார் பல்புகளையும் தயாரிக்கிறது. இந்த பல்புகள் மலிவு விலையில் நல்ல அம்சங்களுடன் வருகின்றன. பிலிப்ஸ் மோஷன் சென்சார் எல்இடி பல்ப் ரூ.500க்கும் குறைவான விலையில் இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது.
பிலிப்ஸைத் தவிர, பல பிராண்டுளும் இவ்வகை பல்புகளைக் கொண்டிருக்கின்றன. ஹலோனிக்ஸின் 10W பல்பு அமேசானில் ரூ.326க்கு கிடைக்கிறது. Orient Electric Motion Sensor எனர்ஜி சேவிங் ஆட்டோமேட்டிக் ஆன்/ஆஃப் 10W LED பல்ப் அமேசானில் ரூ.335க்கு கிடைக்கிறது. இந்த ஆட்டோமெடிக் பல்புகள் திருடர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
No comments:
Post a Comment