பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் முறையில் நடத்தப்படும் புதிய இடமாறுதல் வழிகாட்டுதல் நேற்று வெளியிடப்பட்டது.புதுச்சேரியில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு 128 தொடக்க பள்ளி ஆசிரியர்கள் காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு பல ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.இடமாறுதல் உத்தரவுக்கு தடை விதித்த நீதிமன்றம், ஆசிரியர் பணியிட மாறுதல் கொள்கை உருவாக்க உத்தரவிட்டது.
இதையெடுத்து பள்ளி கல்வித்துறை நகரம் -1, கிராமம் -2, பிராந்தியம் -3 என ஆசிரியர்கள் பணியாற்றிய இடங்களுக்கு பள்ளிகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் இடமாறுதல் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கும் சில ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, சீனியாரிட்டி, பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த கோரிக்கை விடுத்தனர்.காரைக்காலில் பணியாற்றும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கடந்த 17 ம் தேதி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இடமாற்றம் வழங்க வலியுறுத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.புதுச்சேரியில் பணியாற்றும் சீனியர் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் புதிய இடமாறுதல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.இந்நிலையில், 2023-24ம் ஆண்டிற்கான ஆசிரியர் பணியிட மாறுதல் வழிகாட்டுதல்கள் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றக் கூடாது. வெளி பிராந்தியத்தில்2 ஆண்டுகள் பணி முடித்த பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சொந்த பிராந்தியத்திற்கு அழைத்து வரப்பட்டு கிராமப்புறப் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.
மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், புற்றுநோய், நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பு, காசநோய், சிறுநீரகம், கல்லீரல், இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற தீவிர நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு பணியிட மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.55 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியருக்கு வெளி பிராந்திய பணியிட மாறுதலில் இருந்தும், 57 வயது நிரம்பியவர்களுக்கு கிராமப்புற பணியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர் நிலை--1, தலைமை ஆசிரியர் நிலை--2 போன்ற உயர் பதவிகளுக்கு வயது தளர்வு பொருந்தாது.
ஒவ்வொரு ஆசிரியரும் இதுவரை பணியாற்றிய பள்ளி, பிராந்தியம் அடிப்படையில் பட்டியல் தயாரித்து ஆசிரியர்களுக்குகவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்படும். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என தனித்தனியாக கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment