Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைந்து நடத்த கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பக்கம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடக்கக்கல்வி இயக்குனரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதாவது தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. அதனால் 1, 2, 3ம் வகுப்புகளுடன் 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது எனவும், ஈராசிரியர் பள்ளிகளில் 1, 2,3 ஆம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும் 4,5 ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும்.
அதே போன்று 3 அல்லது 4 ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளை பிரித்து பாடங்களை நடத்த வேண்டும். மேலும் போதிய ஆசிரியர்கள் இருப்பின் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment