Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆரோக்கியமாக இருப்பதற்கு வெந்நீரைக் குடிப்பது ஒரு சிறந்த வழி என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்.
இது முழுமையாக உண்மையல்ல. சிலர் ஒரு இடத்தின் வானிலை அல்லது சுகாதார நிலைமைகள் போன்ற பல காரணங்கள் கருதி அடிக்கடி சூடான நீரை குடிக்கிறார்கள். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சூடான தண்ணீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அடிக்கடி சுடு நீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
சூடான நீரை அதிகமாக உட்கொள்வது உங்கள் தூக்கத்தில் சமநிலையை ஏற்படுத்துகிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உங்கள் தூக்கம் கெடும் என்பதால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெந்நீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
சிறுநீரகம் உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது. அதிகமான வெந்நீரை குடிப்பதால் சிறுநீரகங்கள் செயல்படும் வேகத்தை அதிகரிக்கும். இது அதன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்.
வெந்நீரைக் குடிக்கும்போது, நீரிழப்பு ஏற்படுகிறது. இது சிறுநீரகத்தை பாதிக்கலாம். இது சிறுநீரகத்திற்கு அதிக வேலையை கொடுக்கும். இதனால் இந்த உறுப்பு அதிக வேலை செய்ய வழிவகுக்கும்.
இதனால் இறுதியில் உங்கள் சிறுநீரகம் பாதிப்படையும்.
வெந்நீரை அடிக்கடி குடிப்பதால், உடலில் உள்ள உள் உறுப்புகளுக்கு உள்புறச் சூடு ஏற்படும். சூடான நீர் உங்கள் உதடுகள், வாய் மற்றும் நாக்கினை எளிதில் காயப்படுத்தலாம்.
குடிப்பதற்கு முன் நீரின் வெப்பநிலையை சரிபார்க்கவும். சூடாக பருகுவதை விட வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment