Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 12, 2023

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - டிஆர்பி அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: வட்டார கல்வி அலுவலர்(Block Educational Officer) காலியிடங்கள்: 33 சம்பளம்: மாதம் ரூ.36,900-1,16,600 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டம்(பி.எட்) முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கட்டாய தமிழ் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம்: ரூ.600. இதில் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.7.2023 

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News