இந்த காலத்தில் அனைவருக்கும் முழங்கால் வலி, மூட்டு வலி, கீழ் வாதம் போன்ற பிரச்சனைகள் எற்படுவது சாதாரணமாகி விட்டது. இந்த முழங்கால் வலி மூட்டு வலியை சரி செய்ய சிலர் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அந்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் தற்காலிகமாக தீர்வுதான் தருமே தவிர நிரந்த தீர்வை தந்து விடாது. இந்த முழங்கால் வலி, மூட்டு வலி, கீழ் வாதம் ஆகியவற்றை நிரந்தரமாக குணமாக்க இந்த பதிவில் அருமையனா மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்;
* வெல்லம்
* மஞ்சள் தூள்
* சுண்ணாம்பு
* ஜாதிக்காய்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை;
ஒரு பேன் பாத்திரத்தில் தேவையான அளவு வெல்லத்தை எடுத்து இடித்து இந்த பேன் பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதில் ஒரு ஸ்பூன் ஆர்கானிக் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைகளில் கிடைக்கும் பாக்கெட் மஞ்சள் தூள் பயன்படுத்தக் கூடாது. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதில் கால் டீஸ்பூன் சுண்ணாம்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். சுண்ணாம்பை நேரடியாக அப்படியே இதில் கலக்க கூடாது. இந்த சுண்ணாம்பில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கரைத்து பிறகு இதில் சேர்க்க வேண்டும்.
பிறகு இதில் ஜாதிக்காய் பொடி ஒரு ஸ்பூண் கலந்து கொள்ள வேண்டும். ஜாதிக்காய் பொடி கிடைக்க வில்லை என்றால் நீங்கள் இதை சேர்க்காமல் இந்த மருந்தை தயார் செய்யலாம்.
இதை அனைத்தையும் நன்கு கலந்து விட்ட பிறகு அடுப்பை பற்ற வைத்து லேசான தீயில் இந்த பேனை அடுப்பில் வைத்து சுடு செய்ய வேண்டும். அடுப்பில் வைத்தவுடன் இது பசை போல மாறும். லேசான தீயில் வெறும் ஒரு நிமிடம் இதை வைக்க வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து இதை இறக்கி விட வேண்டும். இதோ முழங்கால் மூட்டு வலிகளை குணப்படுத்தும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்து வெது வெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு இந்த மருந்தை கை விரல்களில் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மருந்தை இடுப்பு வலி, முழங்கால் வலி ஏற்படும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இது காய்ந்த பிறகு ஒரு துணியை வைத்து அப்படியே கட்டி விட வேண்டும். இதை அப்படியே இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும்.
இது போல இந்த மருந்தை தயார் செய்து சிறிது நாட்கள் பயன்படுத்தி வந்தால் முதுகு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி எல்லாம் மாயமாக மறைந்து விடும்.
வாதம் ஏற்படுவதால் நமக்கு முழங்கால் வலி ஏற்படுகின்றது. இதை சரி செய்ய 10 வெள்ளை பூண்டு பற்களை ஒரு சட்டியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை காலையில் வெறும் வயிற்றில் ஒரு பூண்டு சாப்பிட வேண்டும். பிறகு வெது வெதுபான தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். பின்னர் இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு முறை என்று திறமும் இரண்டு முறை எடுத்துக் கொள்வதால் கீழ் வாதம் ஏற்படுவது குணமாகும். மேலும் அசிடிட்டி போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் குணமாகும்.
இதில் சேர்த்திருக்கும் பொருள்களில் இருக்கும் சத்துக்கள்;
வெல்லத்தில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு உள்ளது. இதனால் எலும்புகள் பலம் பெறும்.
மஞ்சள் தூளில் ஆண்டி இன்ப்ளமேட்ரி சத்துக்கள் அதிக அளவு உள்ளது. இதனால் நமக்கு ஏற்படும் வாதம், வலி ஆகியவற்றை எளிமையாக குறைத்து விடுகின்றது.
சுண்ணாம்பில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. நம் எலும்புகளை பலப்படுத்த இந்த சுண்ணாம்பு அதிகளவு உதவி செய்கின்றது.
No comments:
Post a Comment