Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 17, 2023

பான் கார்டை ஆன்லைனில் புதுப்பிக்கணுமா?.. இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்...!!!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பான்கார்டு வைத்திருப்போர் அதில் பதிவாகி இருக்கும் விபரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

அதாவது எழுத்துப்பிழை, கையொப்பம் (அ) புகைப்படம் பொருந்தாதது உள்பட உங்களது பான்கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், உடனே ஆன்லைன் மூலம் செய்துக்கொள்ளலாம். இப்போது ஆன்லைன் வாயிலாக பான்கார்டில் போட்டோ, கையொப்பத்தை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.

பான் கார்டிலுள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தை புதுப்பிக்க முதலாவதாக NSDL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html-க்கு போக வேண்டும். தற்போது அப்ளிகேஷன் டைப் ஆப்ஷனில் உள்ள பான் டேட்டாவில் மாற்றம் (அ) திருத்தம் எனும் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து நீங்கள் “கேட்டகிரி டைப்” ஐ தேர்வு செய்யவும். இங்கே Individual விருப்பத்தை தேர்ந்தெடுத்து பின் கேட்கப்படும் தேவையான விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தற்போது கேஒய்சி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின் புகைப்படம் பொருந்தவில்லை மற்றும் கையொப்பம் பொருந்தவில்லை என்பதை டிக் செய்து தந்தை (அ தாயின் விபரங்களை உள்ளிடவும். அதனை தொடர்ந்து PAN Card Signature Change(அ) Photo Update-க்கு அடுத்து என்பதை கிளிக் செய்யவும். உங்களது அடையாள அட்டை, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரங்களை இணைக்க சொல்லி கேட்கப்படுவீர்கள். அதை செய்தபின் டிக்ளரேஷன் செக்பாக்ஸை டிக் செய்து சமர்ப்பி என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகள் (அ) படிகளை முடித்தபின், நீங்கள் கட்டணம் செலுத்தவேண்டிய பகுதிக்கு வருவீர்கள். அடுத்து இந்தியாவிலுள்ள முகவரிகளின் கீழ் பான் கார்டிலுள்ள உங்களது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்ற ரூ.101 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்தவேண்டும். அதேநேரம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள முகவரிகளுக்கு ரூபாய் 1011 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட தொகையை செலுத்தியபின் செயல்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான 15 இலக்க எண்ணைப் பெறுவீர்கள். இப்போது உங்களது விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வருமான வரித்துறையின் பான் சேவை பிரிவுக்கு அனுப்பவேண்டும். அதோடு உங்களது விண்ணப்பம் எந்த கட்டத்தை எட்டி உள்ளது என்பதை கண்காணிக்க கிடைத்த 15 இலக்க ஒப்புகை எண்ணை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News