Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது.
இதில் பயன்பெற விரும்புபவர்கள் அருகே உள்ள சிலிண்டர் நிறுவன அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு குடும்ப உறுப்பினர்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, யாருடைய பெயரில் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கிறார்களோ அவர்களது புகைப்படம், மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம். அதேபோல் அந்த ஆவணங்களின் நகல்களை வைத்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் குடும்பத்தில் யாரும் இதுவரை சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கக் கூடாது என்ற நிபந்தனை இருக்கிறது. அதேபோல் விண்ணப்பித்த பின் உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்படும். மேலும் நீங்கள் இலவச சிலிண்டர் பெற தகுதியானவர்கள் என்றால் மூன்று மாதங்களுக்கு பின் உங்களது மொபைல் எண்ணிற்கு மெசேஜ் வரும். இதனை அடுத்து சிலிண்டர் மற்றும் அடுப்பு போன்ற உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அதன் பின் உங்களுக்கு சிலிண்டர் மானிய தொகையாக ரூ.240 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment